Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதுமே பாஸ்தான்: விக்ரம் புகழாரம்

சென்னை: சுபாஸ் கரன் வழங்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘பொன்னியின் செல்வன் 2’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இதில் நடித்துள்ள விக்ரம் கூறுகையில், ‘முதல் பாகம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தைப் பற்றி நிறைய பேசினேன். 2வது பாகத்துக்காக ‘பிஎஸ்கீதம்’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார்.

அவர் எப்போதுமே பாஸ்தான்’ என்றார். ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது, ‘இந்த கீதத்தை உருவாக்கியதன் பின்னணியில் எந்த உள்நோக்கமும் இல்லை’ என்றார். திரிஷா கூறுகையில், ‘முதல் பாகத்தில் நான் ஏற்றிருந்த குந்தவை கேரக்டருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. 2ம் பாகம் அனைவருக்கும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். கார்த்திக்கும், எனக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி பற்றி பலர் பேசியிருக்கின்றனர். 2ம் பாகத்தில் எங்களுக்கு இடையே வெறித்தனமான சண்டை இருக்கும்’ என்றார்.