Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நார்வே பட விழாவில் விருது பெற்ற தமிழ் குறும்படம்

சென்னை: இயக்குனர் பாலா, மற்றும் இயக்குனர் முத்தையாவின் படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர், சுபாஷ் பாரதி. இவர் இயக்கி இருக்கும் குறும்படம், ‘போர் பறவைகள்’. நார்வே நாட்டில் நடந்த உலக திரைப்பட விழாவில், சிறந்த குறும்படத்திற்கான விருது பெற்றிருக்கிறது. இந்தப் படம் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், தமிழர்களின் வாழ்வியலையும் அரசியலையும் எதார்த்தம் மாறாமல் பதிவு செய்திருக்கிறது.

கதை நாயகனாக இதில் நடித்திருக்கும் ஜெகன், குறும்படத்தை தயாரித்துள்ளார். ‘நார்வே தமிழ் பிலிம் பெஸ்டிவல்’ டைரக்டர் வசீகரன் சிவலிங்கம் ஏற்பாட்டில், நார்வேக்கான இந்திய தூதர் டாக்டர். அக்கினோ விமல், ஓஸ்லா மாநகர மேயர் அமீனமெபல் ஆன்டர்சன் ஆகியோர் விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார்கள்.