சென்னை: ஜூலை 28ம் தேதி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கேப்டன் மில்லர்’. நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் படக்குழு பெரிய அளவில் காட்சியை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து நடிகர் தனுஷ் ட்வீட் செய்திருந்த நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் எனவும் கூறப்படுகிறது.