Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெண் குழந்தை வேண்டாம் சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை

ஐதராபாத்: பெண் குழந்தைகள் குறித்து சிரஞ்சீவி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ‘பிரம்ம ஆனந்தம்’ என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சிரஞ்சீவி பெண் குழந்தைகள் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அவர் பேசும்போது, “நான் வீட்டில் இருக்கும்போது பேத்திகளுடன் இருப்பதுபோல இருக்காது. பெண்கள் விடுதியில் இருக்கும் வார்டனைப்போல தான் இருக்கும். என்னைச் சுற்றி லேடீஸ் மட்டும்தான் இருப்பார்கள். அதனால் ராம் சரணிடம் இந்த முறையாவது ஒரு ஆண் குழந்தையைப் பெற்று தரும்படி கேட்டிருக்கிறேன். நமது மரபை தொடர வழிசெய் என்று வாழ்த்துகிறேன். ஆனால் அவருக்கோ அவர் மகள்தான் எல்லாமே. அதனால் அவர் மீண்டும் பெண் குழந்தையைப் பெற்றெடுப்பாரோ என்று பயமாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். ஆண் குழந்தைகளை உயர்த்தியும், பெண் குழந்தைகளை தாழ்த்தியும் பேசியிருக்கிறார் என்று சிரஞ்சீவிக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத், சிரஞ்சீவி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரியுள்ளார்.