Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

100% வெளிநாட்டு படங்களுக்கு வரிவிதிப்பு; பாலிவுட் உள்பட உலக திரைத்துறைக்கு சிக்கல்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% வரி விதிக்க உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை விதியை விதித்து வருகிறார். இவரது பரஸ்பவர வரிவிதிப்பு கொள்கையால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்க வர்த்தக்கத்துறை தொடர்பாக எடுக்கப்பட்ட புதிய நிர்வாக உத்தரவில், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கும் நடைமுறையை தொடங்க உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவால், அமெரிக்க திரைப்படத் தொழிலை பாதுகாக்க முடியும் என்றும், உள்நாட்டு சினிமா தயாரிப்பை ஊக்குவிக்க முடியும் என்றும் அமெரிக்கா கூறுகிறது. ஆனால் டிரம்பின் முடிவானது ஹாலிவுட்டிற்கு எதிரான வர்த்தகப் போராக பார்க்கப்படுகிறது. குறிப்பாக நெட்ஃபிக்ஸ் மற்றும் டிஸ்னி போன்ற நிறுவனங்கள் வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது. புதிய வரி விதிப்பு கொள்கையால், வெளிநாட்டு திரைப்படங்களின் விலையை உயர்த்தி, அமெரிக்க சந்தையில் அவற்றின் போட்டித்தன்மையை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய திரைப்படத் தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

இந்த வரிவிதிப்பு கொள்கையால், வெளிநாட்டு திரைப்படங்களில் இருக்கும் ஒருசார்பு கொள்கையை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறுகின்றனர். ஆனால் சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரும் பாதிப்பை இந்த வரிவிதிப்பு இருக்கும். குறிப்பாக இந்தியா, தென் கொரியா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் திரைப்படங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். திரைப்படத் துறையில் உலகளாவிய வர்த்தக உறவுகளையும் பாதிக்கலாம். இந்திய திரைப்படத் துறையான பாலிவுட், அமெரிக்க சந்தையில் தனது இருப்பை விரிவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த நேரத்தில், டிரம்ப் அரசின் 100% வரிவிதிப்பு அறிவிப்பானது பெரும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.