Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிரஞ்சீவிக்கு 126 அடி உயர கட்அவுட்

ஐதராபாத்: சிவா இயக்கத்தில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடித்த படம் ‘வேதாளம்’. இந்த படம் தெலுங்கில் ‘போலா சங்கர்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் தமன்னா அவர் ஜோடியாகவும் கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்துள்ளனர். மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது. காட்ஃபாதர் தெலுங்கு படத்தின் வெற்றிக்கு பிறகு சிரஞ்சீவி நடிக்கும் படம் என்பதால், எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு 126 அடி உயர சிரஞ்சீவியின் கட் அவுட் தெலங்கானா மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூர்யாபேட்டில் இந்த கட் அவுட் ‘போலா சங்கர்’ படத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தெலுங்கு சினிமாவில் இத்தனை உயர கட்அவுட் எந்த நடிகருக்கும் வைத்ததில்லை. இதனால் இந்த கட்அவுட்டை ரசிகர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். பலர் இதன் முன் நின்று செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுகிறார்கள். அதனால் இந்த கட்அவுட் புகைப்படம் வைரலாகியுள்ளது.