Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

22 விருதுகளை வென்ற பிஎம்டபிள்யூ 1991

சென்னை: கிரீன்விஸ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பிஎம்டபிள்யூ 1991’ பையா, கருங்காலி, வி3 உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் பொன்முடி திருமலைசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்,. இந்த படத்தில்வடசென்னை படத்தில் நடிகர் தனுஷுக்கு அம்மாவாக நடித்த நடிகை மணிமேகலை மற்றும் படத்தின் மைய கதாபாத்திரமாக மதுரையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கௌதம் நடித்துள்ளார். இதுவரை பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இப்படம் அனுப்பப்பட்டு 22 விருதுகளை பெற்றுள்ளது. அடிப்படையில் பொன்முடி திருமலைசாமி ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கலைக்கூடம் ஒன்றை துவங்கி மாணவர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார். இவர் முதன்முறையாக கதாநாயகனாக நடித்த ‘ஜி’ திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றது. பொன்முடி திருமலைசாமி கூறும்போது, ‘‘ஒரு காலத்தில் சைக்கிள் வைத்திருப்பதே மிகப்பெரிய கௌரவமாகவும் பெரிய விஷயமாகவும் பார்க்கப்பட்டது. சொல்லப்போனால் ஒரு காருக்கு நிகராக அதை பலர் கருதினார்கள். அதை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதையை உருவாக்கினேன்’’ என்றார்.