Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

29ம் தேதி வருகிறது ‘இண்டியானா ஜோன்ஸ்’

சென்னை: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சாகசங்கள் நிறைந்த படமான ‘இண்டியானா ஜோன்ஸ் அன்ட் தி டயல் ஆப் டெஸ்டினி’ என்ற படம், இந்தியாவில் அமெரிக்காவை விட ஒருநாள் முன்னதாக வெளியிடப்படுகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் ஹீரோ ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார். மற்றும் போப் வாலர்-பிரிட்ஜ், அன்டோனியோ பன்டேராஸ், ஜான் ரைஸ்-டேவிஸ், டோபி ஜோன்ஸ், பாய்ட் ஹோல்ப்ரூக், மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ளனர். ஜேம்ஸ் மான்கோல்ட் இயக்கியுள்ளார். கேத்லீன் கென்னடி, பிராங்க் மார்ஷல், சைமன் இம்மானுவேல் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜார்ஜ் லூகாஸ் இணைந்து நிர்வாக தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.