Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

4 ஆண்டு ரிலேஷன்ஷிப் முடிந்தது: நடிகரை பிரிந்தார் ஷமிதா ஷெட்டி

மும்பை: நடிகரான 4 ஆண்டு காதலரை நடிகை ஷமிதா ஷெட்டி பிரிந்துவிட்டார். ஷில்பா ஷெட்டியின் தங்கையான ஷமிதா ஷெட்டிக்கு 48 வயதாகிறது. இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘ராஜ்ஜியம்’ படத்தில் நடித்தார். ஷமிதா, கடந்த 4 ஆண்டுகளாக இவர் இந்தி நடிகர் ராகேஷ் பபட் உடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இவர்களின் காதலுக்கு ஷமிதாவின் அம்மாவும் அக்கா ஷில்பா ஷெட்டியும் பச்சைக் கொடி காட்டியிருந்தனர். இதனால் இவர்கள் விரைவில் திருமணம் செய்யும் முடிவில் இருந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இது குறித்து ஷமிதா கூறும்போது, ‘‘நாம் எதிர்பார்க்காத விஷயம் நடக்கும்போது இதயம் உடைந்து போகிறது. அதுதான் எங்கள் உறவில் நடந்தது. அது நம்பிக்கை இழந்தபோகும் நேரமாக கூட இருக்கலாம். அது பற்றி பேச நான் விரும்பவில்லை. ஆனால் ராகேஷுடன் இப்போது நான் ஒன்றாக இல்லை என்பது மட்டுமே உண்மை. அதற்கு மீடியாவும் ரசிகர்களும் மதிப்பு தந்து என்னை தனிமையில் விட வேண்டும்’’ என கேட்டுக்கொண்டுள்ளார்.