கே.சி.பி.மிதுன் சக்ரவர்த்தி, ஜீவிதா நடித்துள்ள ‘அடியே வெள்ளழகி’ என்ற பாடலின் பர்ஸ்ட் லுக்கை 100க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் வெளியிட்டனர். கட்டெறும்பு யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இப்பாடலை, கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார். ‘பில்லா பாண்டி’, ‘தேவராட்டம்’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘அங்காரகன்’, ‘கருப்பு பெட்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ள கே.சி.பிரபாத்தின் மகன் கே.சி.பி.மிதுன் சக்ரவர்த்தி, எம்.முத்தையா இயக்கிய ‘கொடிவீரன்’ என்ற படத்தில் சிறுவனாக நடித்திருந்தார். தொடர்ந்து ‘பில்லா பாண்டி’, ‘கருப்பு பெட்டி’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது குகன் இயக்கும் படத்தில் முக்கிய கேரக்டரிலும், சிவாஜி இயக்கும் படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதோடு, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி விஸ்காம் படித்து வருகிறார்.
+