Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதலுக்காக பாலினம் மாறிய கதை

ஜி.வி.பி பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பெருமாள் தயாரித்து எழுதி இயக்கியுள்ள ‘சரீரம்’ என்ற படம், வரும் 26ம் தேதி திரைக்கு வருகிறது. புதுமுகங்கள் தர்ஷன், சார்மி, ஜே.மனோஜ், ‘பாய்ஸ்’ ராஜன், ஷகீலா, மதுமிதா, ‘புதுப்பேட்டை’ சுரேஷ், கவுரி, லில்லி, மிலா ஆகியோருடன் முக்கிய ேவடத்தில் ஜி.வி.பெருமாள் நடித்துள்ளார். டோர்னலா பாஸ்கர்.கே, பரணி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். வி.டி.பாரதிராஜா இசை அமைக்க, லஷ்மன் எடிட்டிங் செய்துள்ளார். ேஜ.மனோஜ் நடனப் பயிற்சி அளிக்க, தவசி ராஜ் சண்டைக் காட்சி அமைத்துள்ளார். விஜய் ஆனந்த், குமரவேலன் வேதகிரி பாடல்கள் எழுதியுள்ளனர். ஆந்திரா, சித்தூர், வேலூர், பெங்களூரு, பாண்டிச்சேரி, மாமல்லபுரம், கோவளம், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு காதல் ஜோடி, தங்களின் காதலுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், வாழ வழி தெரியாமல், தங்கள் காதலை நிரூபிக்க ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்கின்றனர். பிறகு அவர்களை இந்த சமூகம் ஏற்றுக்கொண்டதா, இல்லையா என்பது கதை.