Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

40வது ஆண்டில் நடிக்கும் புதிய கேரக்டர்

தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கும் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடிக்க, இன்னும் பெயரிடப்படாத படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘இடி மின்னல் காதல்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாலாஜி மாதவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், அவருடன் இணையும் தமிழ் மற்றும் கன்னட நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படுகிறது.

இன்வெஸ்டிகேட்டட் வித் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தை ஸ்ரித்திக் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் சூரஜ் சர்மா, கிருஷ்ணகுமார்.பி, சாகர் ஷா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த போஸ்டரில், பேருந்து ஒன்றில் நடந்த குற்றச்சம்பவம் தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் விசாரிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளதால், இப்படம் புலனாய்வு சம்பந்தப்பட்ட திரைக்கதை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கன்னட திரையுலகில் 40வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிவராஜ்குமார், முதல்முறையாக உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.