Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஓர் உடையை ஒரு முறை மட்டும் யூஸ் பண்றாங்க: நடிகர், நடிகைகளை சாடிய ஆமிர் கான்

மும்பை: ஒரு முறை அணியும் உடையை மறுதடவை எந்த நடிகர், நடிகையும் பயன்படுத்தாதது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது என்றார் ஆமிர்கான். பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ஆமிர்கான். அவரே இதுபோல் சொல்லியிருப்பதை பார்த்து நெட்டிசன்கள் பலரும் ஏராளமான கமென்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள். அப்படி ஆமிர் கான் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம். அவர் கூறியது: நான் ஒரு முறை பயன்படுத்தும் உடையை தூக்கி வீசுவதில்லை. என்னிடம் 20 வருடத்துக்கு முந்தைய ஆடைகள் கூட பத்திரமாக இருக்கிறது.

ஒரு நிகழ்ச்சியில் என்னை ஒரு ஆடையில் நீங்கள் பார்த்தால், இன்னொரு நிகழ்விலும் அதே ஆடையில் நான் இருப்பதை பார்க்கலாம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு ஆடை அணியும் நடிகன் நான் கிடையாது. ஆனால் நடிகர்கள், நடிகைகள் பலரும் ஒரு முறை ஒரு உடையை பயன்படுத்தினால், மறுமுறை அதை பயன்படுத்துவதில்லை. அது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. எனது சில பழைய உடைகள் கிழிந்துபோனால் கூட அதை கிழிந்த இடத்தில் தைத்து பயன்படுத்தி இருக்கிறேன்.

அதுபோன்ற ஆடையில் நான் பொது இடங்களில் கூட பங்கேற்று இருக்கிறேன். இவ்வாறு ஆமிர் கான் கூறியுள்ளார். ‘ஆமிர்கான் சொல்வது உண்மைதான். ஒரே மாதிரியான ஆடையில் அவரை பலமுறை பார்த்துள்ளோம். அவரது எளிமைக்கு ஈடில்லை. சூப்பர் ஸ்டார் நடிகரே இதுபோல் இருப்பது ஆச்சரியம்தான்’ என நெட்டிசன்கள் பலரும் அவரைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.