Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இசை ஆல்பத்தில் ஆரி, சான்வி

சியர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரமாண்டமாக தயாரித்துள்ள ‘கிம்ச்சி தோசா’ என்ற மியூசிக் வீடியோ ஆல்பத்தை ‘சியர்ஸ் மியூசிக்’ வெளியிட்டுள்ளது. இப்பாடல் இந்தோ-கொரியன் கொலாபரேஷனில் உருவாகியுள்ளது. இதுகுறித்து சியர்ஸ் மியூசிக் நிறுவனர் அபிலாஷா கூறுகையில், ‘இசைக்கலைஞர்களின் கனவுகளை நனவாக்க சியர்ஸ் மியூசிக் நிறுவனத்தை தொடங்கி, திறமை வாய்ந்த இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்களை அறிமுகம் செய்கிறோம். தமிழ் மற்றும் இந்திய மொழிகளை தாண்டி, உலக அளவில் மியூசிக் ஆல்பங்களை தயாரிக்கிறோம். ‘கிம்ச்சி தோசா’ ஆல்பத்துக்கு தரண் குமார் இசை அமைத்துள்ளார்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, டி.முத்துராஜ் அரங்கம் அமைத்துள்ளார். ரூபன் எடிட்டிங் செய்ய, டிடிசி நடனக்காட்சி அமைத்துள்ளார். முதல்முறையாக நடிகர் ஆரி அர்ஜுனன் இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். அவருடன் சர்வதேச கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், தரண் குமார், தென்கொரியாவில் பிரபலமான ஏஏ பேண்ட் பாடகர் அவுரா, ‘குடும்பஸ்தன்’ படத்தின் ஹீரோயின் சான்வி மேக்னா நடித்துள்ளனர். இது ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ளது’ என்றார்.