Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகும் படத்தில் அனஸ்வரா

சென்னை: ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மூலம் இயக்குனராக கவனம் ஈர்த்தவர் அபிஷன் ஜீவிந்த். தற்போது புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரிக்க, ஜியான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி என்டெர்டைன்மெண்ட் இணைந்து வழங்குகின்றனர்.

இதில் அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜை விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் சசிகுமார், சிம்ரன், ஆர்ஜே பாலாஜி, நடிகர் மணிகண்டன், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, ‘லவ்வர்’ பட இயக்குநர் பிரபு ராம் வியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.