சென்னை: ‘நாள் 2’ என்ற மராட்டிய படத்திற்காக திரிஷா தோஷர் என்ற 4 வயது சிறுமி, ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் நேற்று முன்தினம் தேசிய விருது பெற்றார். இதன் மூலம் 6 வயதில் தேசிய விருது பெற்ற கமல்ஹாசனின் சாதனையை இந்த சிறுமி முறியடித்துள்ளார்.
கமல் வெளியிட்ட பதிவில், ‘‘என்னுடைய சாதனையை முறியடித்த திரிஷா தோஷருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். தொடர்ந்து உங்கள் திறமையை வளர்க்க பாடுபடுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுக்கும் என் பாராட்டுகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.