Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிகரான தயாரிப்பாளர்

சென்னை: எம்.கே. பிலிம் ஒர்க்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘லாரா’ படத்தில் அதன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் அந்தப் படம் வெற்றி பெற்றது. டெண்ட் கொட்டா ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து திருமலை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுகவனம் இயக்கும் ‘ஒண்டி முனியும் நல்ல பாடனும்’ என்கிற படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘லாரா படத்தில் யதார்த்தமாக நடித்ததாலேயே ஒண்டி முனியும் நல்ல பாடனும் படத்தில் அவருக்கு முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது’ என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் முடிந்து. விரைவில் வெளியாகியுள்ளது. கார்த்திகேசன், அடுத்ததாகத் தயாரிக்க உள்ள படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதன் தொடக்க விழா அவரது பிறந்த நாளான ஜூன் 14ம் தேதி நடைபெற உள்ளது.