Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தெலுங்கு நடிகர் ராம்சரண் - உபாசனா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

தெலுங்கு நடிகர் ராம்சரண் - உபாசனா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்சரண். நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரணுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு அப்போலோ குழுமத்தின் நிறுவனர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவுடன் திருமணம் ஆனது. திருமணமாகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மகன் ராம்சரணும் மருமகள் உபாசனாவும் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக கடந்த ஆண்டு சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 20) அதிகாலையில் ராம்சரண் - உபாசனா தம்பதிக்கு ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ராம்சரண் - உபாசனா தம்பதிக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.