Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிகர் செக்ஸ் தொந்தரவு தமன்னா பகீர் புகார்

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமான நடிகை தமன்னா. ஒரு காலத்தில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். சமீப காலங்களில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இருந்தாலும் இப்போது இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தென்னிந்திய நடிகர் ஒருவர் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதில் தமன்னா கூறியது: எனது காரியர் ஆரம்ப காலத்தில் தென்னிந்திய படம் ஒன்றில் நடித்தேன். அப்போது அதில் நடித்த நடிகர் எனக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். அந்த நடிகரின் செயல்கள் எல்லாம் எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. பலமுறை அவரிடம் இதுபோல் நடக்காதீர்கள் என கெஞ்சினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. பிறகு ஒரு நாள் தைரியத்தை வரவைத்துக்கொண்டு, கோபமாக பேசினேன். இனியும் உங்களது இதுபோன்ற கேவலமான செயல்கள் தொடர்ந்தால் நான் இந்த படத்திலிருந்து விலகுவேன். நடிகர் சங்கத்திலும் புகார் அளிப்பேன் என அந்த நடிகரிடமே சொல்லிவிட்டேன். அதன் பிறகே அவர் என்னுடன் பேசுவதையும் என்னை நெருங்குவதையும் கைவிட்டார். இதுபோன்ற அனுபவம் எனக்கு பிறகு ஏற்படவில்லை. ஆனாலும் இது மிகவும் கசப்பான அனுபவம்தான். இவ்வாறு தமன்னா கூறினார்.