Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அடுத்த படத்திற்கு தயாரான நடிகர் சூரி!

சென்னை: தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் கடந்த 16-ந் தேதி 'மாமன்' படம் வெளியானது. பிரசாந்த் பண்டிராஜ் இயக்கிய இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, நடிகர் சூரி நடித்து வரும் படம் மண்டாடி'. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ இப்படத்தை தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில், அடுத்த கவனம் மண்டாடி என்று குறிப்பிட்டு படத்தில் நடித்து வரும் கதாபாத்திரத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைராகி வரும் நிலையில், இப்படம் மீனவர் வாழ்க்கை பாடமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.