நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள ‘குமார சம்பவம்’ என்ற படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம்.குமார், குமரவேல், பாலசரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா நடித்துள்ளனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, அச்சு ராஜாமணி இசை அமைத்துள்ளார். வீனஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் கே.ஜி.கணேஷ் தயாரித்துள்ளார்....
நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள ‘குமார சம்பவம்’ என்ற படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம்.குமார், குமரவேல், பாலசரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா நடித்துள்ளனர். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, அச்சு ராஜாமணி இசை அமைத்துள்ளார். வீனஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் கே.ஜி.கணேஷ் தயாரித்துள்ளார். வரும் 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது. பாலாஜி வேணுகோபால் கூறுகையில், ‘நான் இயக்கிய முதல் படம், ‘லக்கி மேன்’. ஹீரோ குமரனுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தான் ‘குமார சம்பவம்’ என்ற படமாக உருவாகியுள்ளது. இது ஒரு போராளி பற்றிய கதை. ஆனால், அவனது போராட்டத்தை பற்றிய கதை அல்ல. இது ஒரு ஃபிலிம் மேக்கரின் கதை. ஆனால், அவர் படம் தயாரித்த கதை அல்ல.
படத்தில் இடம்பெறும் பாடல்களை நானே எழுதியுள்ளேன். 2கே கிட்ஸ்கள் எப்போதாவது சோர்வாக இருப்பது போல் உணர்ந்தால், அப்போது கேட்க வேண்டும் என்பதற்காகவே ‘விடியாத இரவு ஒன்று’ என்ற பாடலை எழுதினேன். கே.பாக்யராஜ் இயக்கிய பல வெற்றிப் படங்களுக்கு நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமார் ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இதுவரையிலும் இணைந்து நடிக்காத அவர்களை, இப்படத்தில் முதல்முறையாக இணைந்து நடிக்க வைத்திருக்கிறேன்’ என்றார்.