Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிகை கிரணின் ஆபாச வீடியோ லீக்: போலீசில் புகார்

சென்னை: கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’, விக்ரமின் ‘ஜெமினி’, அஜித்துடன் ‘வில்லன்’ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் கிரண் ரத்தோட். ஒரு கட்டத்திற்கு பிறகு கிரணுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போன நிலையில் கடந்த பல வருடங்களாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இன்ஸ்டாவில் அவ்வப்போது அவர் வெளியிடும் கிளாமர் போட்டோ மற்றும் வீடியோக்கள் பார்த்து ரசிகர்கள் அடிக்கடி ஷாக் ஆகின்றனர். காரணம், அதில் பல ஆபாசமாக இருந்துள்ளன. இந்நிலையில் கிரண் தனது ஆபாச வீடியோவை சிலர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள் என்றொரு தகவலை தெரிவித்து இருக்கிறார். அது டிஜிட்டல் ஆக மாற்றம் செய்யப்பட்ட வீடியோ எனவும் அவர் கூறி இருக்கிறார். அதை பற்றி மும்பை சைபர் க்ரைமில் அவர் புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும் கிரண் கேட்டுக்கொண்டிருக்கிறார்.