Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தப்புக் கணக்கு போட்ட நடிகை

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிக்க, நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கியுள்ள படம், ‘குற்றம் புதிது’. தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, ‘பாய்ஸ்’ ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் நடித்துள்ளனர். கிரைம் திரில்லர் கொண்ட இப்படம் வரும் 29ம் தேதி ரிலீசாகிறது. தருண் விஜய், எஸ்.கார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். உத்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஹரி உத்ரா தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். படம் குறித்து சேஷ்விதா கனிமொழி கூறுகையில், ‘நான் நடிக்க ஒப்பந்தமான முதல் படம், ‘குற்றம் புதிது’. ஹீரோயினாகி விட்டால் செம ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால், இப்போதுள்ள நிலமை என்னை அதிகமாக பயமுறுத்தி இருக்கிறது’ என்றார். தருண் விஜய் கூறும்போது, ‘இது எனது முதல் படம். மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளேன். பொறுமையாக தொடங்கும் படம், போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பாயாக நடித்துள்ளேன். என்னுடன் நடித்த பலர் அதிக திறமைசாலிகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. ஆனால், அனைவருமே எனக்கு பேராதரவு கொடுத்து உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து தமிழில் படம் தயாரித்து நடிப்பேன்’ என்றார்.