Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிகைக்கு புரபோஸ் செய்த 17 வயது சிறுவன்

திரைப் பிரபலங்களை பார்த்தால் அவர்களுடன் செல்ஃபி எடுக்கவேண்டும் என ரசிகர்கள் நினைப்பார்கள். அதில் சிலர் போட்டோ எடுப்பதோடு நிறுத்தாமல் தங்கள் மனதில் இருக்கும் எண்ணத்தை தெரிவிப்பார்கள். இன்னும் சிலர் நடிகைகளின் சமூக வலைத்தளத்தில் மெசேஜ் அனுப்புவார்கள். அந்தவகையில் மலையாள நடிகை ஒருவரிடம் 17 வயது சிறுவன் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறான். சமீபத்தில் மலையாள நடிகை அவந்திகா மோகனுக்குதான் இப்படிப்பட்ட புரபோஸ் வந்திருக்கிறது.

தனது சமூக வலைத்தளத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக புரபோஸ் செய்து வரும் அந்த பையனுக்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால் அவருக்கு அறிவுரை கூறும் வகையில் அவந்திகா பேசியுள்ளார். அவர் பேசும்போது, ‘‘சிறிது காலமாக எனக்கு மெசேஜ் அனுப்பி வரும் ஒரு இளம் ரசிகரிடம் நான் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு 16 அல்லது 17 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்க்கை என்றால் என்னவென்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லை.

ஒரு வருடமாக இப்படி மெசேஜ் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் இன்னும் ஒரு குழந்தைதான். படிப்பை பற்றி சிந்திக்க வேண்டிய வயதில் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள். நான் உன்னை விட வயதில் ரொம்ப மூத்தவள். நாம் கல்யாணம் செய்துகொண்டால், எல்லாரும் என்னை உன் மனைவியா நினைக்க மாட்டாங்க, உன் அம்மான்னு நினைப்பாங்க. சரியான நேரம் வரும்போது, உன் வாழ்க்கையிலும் ஒரு காதல் கதை உருவாகும்’’ என்றார். அவந்திகா, ‘யக்சி- ஃபெய்த்ஃபுலி யுவர்ஸ்’, ‘காரா’, ‘ஆலமரம்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2017ம் ஆண்டு அனில் குமார் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ருத்ரான்ஷ் என்ற மகன் உள்ளார்.