Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நிர்வாண பார்ட்டியில் இருந்து தலைதெறிக்க ஓடிவந்த நடிகை: பெர்லின் பாரில் பரபரப்பு சம்பவம்

மும்பை: பாலிவுட் இயக்குனர் சேகர் கபூரை காதல் திருமணம் செய்தவர் சுசித்ரா (50). அவர்களுக்கு காவேரி கபூர் என்ற மகள் இருக்கிறார். சேகர் கபூரும், சுசித்ராவும் விவாகரத்து மூலம் பிரிந்துவிட்டனர். சுசித்ராவின் அக்கா, மறைந்த பாலிவுட் நடிகை சுஜாதா குமார். இந்த நிலையில், ஜெர்மனி பெர்லின் நகரில், பிரபல பார் ஒன்றில் நடந்த நிர்வாண பார்ட்டியில் கலந்துகொண்டது குறித்து நடிகையும், பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்தவர் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. தமிழ், இந்தி டி.வி தொடர்களிலும் நடித்துள்ள அவர் ஒரு பாடகியும் கூட. சமீபத்தில் அவர் ஜெர்மனிக்குச் சென்று இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது, ‘பெர்லினில் பாடி பாசிட்டிவிட்டி என்ற நிர்வாண பார்ட்டிக்குச் சென்றேன். இதுபோன்ற பார்ட்டி எல்லாம் ஜெர்மனியில் சர்வசாதாரணம். பாடி பாசிட்டிவிட்டியை ஊக்குவிப்பதே இந்த பார்ட்டிகளின் நோக்கமாகும்.

சரி, நாமும் போய் பார்க்கலாம் என்று நினைத்தேன். என் தோழிக்கு தெரிந்தவருக்கு சொந்தமான பாரில் அந்த பார்ட்டி நடந்தது. விருந்தாளிகள் பட்டியலில் என் பெயரையும் சேர்த்திருந்தனர். ஆனால், பார்ட்டிக்குச் சென்ற வேகத்தில் தலைதெறிக்க ஓடி வந்துவிட்டேன். எனக்கு யாருடைய உடலையும் பார்க்க விருப்பம் இல்லை. ஒரு நல்ல எண்ணத்தில்தான் அந்த பார்ட்டியை நடத்தினர். அது மோசமான பார்ட்டி இல்லை. ஆனால், இந்திய ரான நம்மால் அப்படிச் செய்ய முடியாது. இரவு முழுவதும் நடந்த அந்த பார்ட்டியில், நான் 20 நிமிடங்கள்தான் இருந்தேன்.

இது அனைவரும் கலந்துகொள்ளும் பார்ட்டி இல்லை. அழைக்கப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் பார்ட்டி. நான் அந்த பார்ட்டிக்குச் சென்றது எனது மகளுக்கு தெரியாது. ஆனால், தெரியவந்தாலும் அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார். அவர் எனக்கு நேரெதிர். அதனால் நான் இப்படியொரு பார்ட்டிக்குச் சென்றது தெரியவந்தால் சந்தோஷப்படுவார். 20 நிமிடங்களில் ஓடி வந்துவிட்டா லும், அங்கு போயிருந்தேன் அல்லவா? பெர்லின் ரொம்ப சூடாக இருக்கிறது. கோடையில் இதுபோன்ற நிர்வாண பார்ட்டி நடத்துவது என்பது  சாதாரணம்’ என்றார். இந்தப் பதிவு வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.