Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிரமங்களை கடந்து வாய்ப்பு பெற்ற நடிகை

பாலிவுட்டில் இருந்து சென்று ஹாலிவுட் நட்சத்திரமாக மாறியிருப்பவர், பிரியங்கா சோப்ரா. சில வருடங்களாக ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்திய அவர், தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘எஸ்எஸ்எம்பி 29’ (இன்னும் பெயரிடப்படவில்லை) என்ற பான் வேர்ல்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் மீண்டும் இந்திய திரையுலகிற்கு திரும்பியுள்ளார். இதை தொடர்ந்து ஹிரித்திக் ரோஷன் இயக்கி நடிக்கும் ‘கிரிஷ் 4’ என்ற படத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிப்பு மட்டுமின்றி, தனது கணவர் நிக் ஜோனஸுடன் இணைந்து பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தும் அவர், ஏற்கனவே சில படங்களை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘பாலிவுட்டில் நுழைந்த இரண்டு ஆண்டுகளுக்குள், அங்குள்ள சூழ்நிலையை புரிந்துகொண்டேன். திரையுலக பின்னணி இல்லாதவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன். பாலிவுட்டில் வெளியாட்கள் வெற்றிபெறுவது என்பது எளிய விஷயம் இல்லை. நிறைய சிரமங்களுக்கு பிறகே எனக்கான புதுப்பட வாய்ப்பை என்னால் பெற முடிந்தது. என்னை போல் யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். இதன்மூலம் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து வருகிறேன்’ என்றார்.