Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிகைகளுக்கு உருவகேலி நடக்கிறது: கயாடு லோஹர் பளீச்

சென்னை: இந்தாண்டு வெளியான ‘டிராகன்‘ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கயாடு லோஹர். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வா முரளியுடன் ‘இதயம் முரளி’, ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘இம்மார்ட்டல்’, மற்றும் சிம்புவின் 49வது படத்தில் நடித்து வருகிறார். மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கயாடு லோஹரிடம் நடிகைகளுக்கு ஏற்படும் உருவகேலி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், ‘‘நாம் எங்கு சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் இருந்து தப்பிக்க முடியாது. ஆனால், நாம் மற்றவர்கள் மீது கருணை உடன் இருக்க கற்று கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வெவ்வேறு விதமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அனைவரின் உடல் அமைப்பும் ஒரே மாதிரி இருந்தால் தனித்துவம் என்பது இருக்காது” என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகை கவுரி கிஷனிடம் நிருபர் ஒருவர் உடல் எடை குறித்து கேட்ட கேள்வி சர்ச்சையான நிலையில் பல நடிகைகள் தங்களது ஆதரவை அவருக்கு தெரிவித்து வந்தனர். தற்போது கயாடு லோஹரின் இந்த கருத்து கவனம் பெற்றுள்ளது.