Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சர்ச்சையில் சிக்குவதை வரவேற்கும் நடிகை

இந்தியில் உருவான ‘தி பெங்கால் பைல்ஸ்’ என்ற படத்தில் பல்லவி ஜோஷி நடித்துள்ளார். இதை அவரது கணவர் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ளார். வரும் 5ம் தேதி ரிலீசாகும் இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பேசிய பல்லவி ஜோஷி, ‘புத்தகங்கள் படிக்கும்போது படங்களை பற்றி யோசிப்பது இல்லை. புத்தகங்கள் படிப்பது மறைமுகமாக என்னையும் தாண்டி சில விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005க்கு பிறகு நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இது நானாக எடுத்த முடிவு இல்லை. என்னை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை என்பதே உண்மை. திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டது. அப்போது இந்தி டி.வி ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கினேன். தயாரிப்பிலும் ஈடுபட்டேன்.

அப்போது நடிகை ரேணுகா ஷஹானே, ‘ரீதா’ என்ற படத்துக்கு முன்னணி நடிகையை தேடியபோது யாரும் கிடைக்கவில்லை. பிறகு அவர், திடீரென்று என்னை தேர்வு செய்தார். நான் நடிக்கும் சில படங்கள் சர்ச்சையில் சிக்குகின்றன. அது எனக்கு நன்மை என்றுதான் நினைக்கிறேன். படத்தை பற்றி அதிக சர்ச்சை ஏற்பட்டால், அதுபற்றி ரசிகர்களும், பொதுமக்களும் அதிகமாக பேசுகிறார்கள். பிறகு பார்வையாளர்களே அப்படத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் நான் எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவது இல்லை. பார்வையாளர்களின் வரவேற்பை மட்டுமே மதிக்கிறேன்’ என்றார்