Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதல் தோல்வியால் இந்தியாவை விட்டு வெளியேறிய நடிகை

முன்னணி கிரிக்கெட் வீரருடன் 2 ஆண்டுகள் டேட்டிங் செய்ததாக கூறப்படும் நடிகை குறித்த புகைப்படங்கள் தற்போது மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. இசபெல் லீட் என்பவர் பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல மாடலாகவும் நடிகையாகவும் உள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்வதற்கு முன்பாக இசபெல்லுடன் 2 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக வலம் வந்த புகைப்படங்கள் விராட் கோலியின் திருமணத்திற்கு முன்பு அதிகம் பரவியது. விராட் கோலி உடனான உறவு குறித்து நேர்காணலில் பேசிய இசபெல் தாங்கள் இருவரும் 2 ஆண்டுகளுக்கு டேட்டிங்கில் இருந்ததாகவும், அதனை தாங்கள் வெளிப்படுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஆமிர்கானுடன் தலாஷ், விஜய் தேவரகொண்டாவுடன் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்களில் இசபெல் லீட் நடித்திருக்கிறார். இந்நிலையில் விராட் கோலி குறித்து இணையத்தில் தேடப்பட்டபோது இசபெல் லீடின் பெயரும் வந்ததால் அவரது பின்னணி குறித்தும் ரசிகர்கள் தேடத் தொடங்கினர். அதனால் தற்போது இசபெல் லீடின் புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. காதல் தோல்விக்கு பிறகு இந்தியாவை விட்டு இசபெல் சென்றுவிட்டார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்திய படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளையும் மறுத்துவிட்டார்.