சென்னை: இயக்குனர் எஸ்.எஸ்.தேவதாஸ் (88), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். இவர் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எம்.எஸ்.சுந்தரராமனின் மகன். மறைந்த இயக்குனர் ஏ.பீம்சிங்கிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். கடந்த 1961ல் ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தேவிகா நடித்த ‘பாவ மன்னிப்பு’ என்ற படத்தில் உதவி இயக்குனராக 200 ரூபாய் சம்பளத்துக்கு பணியாற்றிய எஸ்.எஸ்.தேவதாஸை, நடிகை தேவிகா காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களின் மகள் நடிகை கனகா என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1971ல் வெளியான ‘வெகுளிப் பெண்’ என்ற படத்தை எஸ்.எஸ்.தேவதாஸ் இயக்கி இருந்தார். இதில் ஜெமினி கணேசன், தேவிகா நடித்திருந்தனர். இப்படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது.
+
