Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கு முத்தம் தர முயன்ற ஆண் மாடல்: மது விருந்து பார்ட்டியில் பரபரப்பு

மும்பை: மாடலாக இருந்து பின் சினிமா வாய்ப்பை பெற்று பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ஊர்வசி ரவுட்டேலா. முக்கிய ரோலில் நடிப்பதை தாண்டி பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமாகினார். ஒரு பாடலுக்கு ஆட 2 கோடி முதல் 4 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார் ஊர்வசி. தமிழில் தி லெஜெண்ட் படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஊர்வசி, தெலுங்கில் டாக்கு மஹாராஜா படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார். ஒரு மாடலாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஊர்வசி, தற்போது தீபாவளி பார்ட்டி ஒன்றில் மது அருந்தியபடி ஆட்டம் போட்டுள்ளார். அப்போது பாலிவுட்டில் பிரபலமாக இருந்து வரும் ஆண் மாடல் ஓர்ரிவுடன் ஆட்டம் போட்டுள்ளார். அப்போது போதையில் ஓர்ரி, ஊர்வசிக்கு முத்தம் கொடுக்க வந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த ஊர்வசி தனது முகத்தை தள்ளிக்கொண்டு சென்று ஓர்ரியை ஒதுக்குகிறார். இந்த சம்பவத்தால் மது பார்ட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.