Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அதிதி காலில் விழுந்தேன்: பாரதிராஜா நெகிழ்ச்சி

சென்னை: தங்கர் பச்சான் இயக்கியுள்ள படம். ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகரன், யோகி பாபு, அதிதி பாலன் நடித்துள்ளனர். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து பாரதிராஜா நெகிழ்ச்சியுடன் பேசியதாவது: ஒரு காட்சியில் கதாநாயகி அதிதி பாலனின் காலில் நான் விழ வேண்டும். நடிப்பு என்று வந்துவிட்டால் எதையும் பார்க்கக்கூடாது. படத்தில் அவர் அதிதி பாலன் இல்லை. எனது மகள். அதனால் அவரது காலில் விழுந்தேன்.

அதுபோல், எனது மகனாக நடித்த கவுதம் வாசுதேவ் மேனனின் கன்னத்தில் நான் ஓங்கி அறைய வேண்டும். என்னால் அது முடியவில்லை. கை தயங்கியது. உடனே அவர், ‘நான் உங்கள் உதவியாளராகப் பணியாற்றி, அப்போது ஷூட்டிங்கில் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை அடித்திருப்பீர்கள் அல்லவா? அப்படி நினைத்து என்னை அடியுங்கள்’ என்று சொன்னார். உடனே அவரது கன்னத்தில் நிஜமாகவே பளார் என்று அறைந்தேன். திரைப்பட வரலாற்றில் சில படங்கள் வருடக்கணக்கில் பேசப்படும். அந்த வரிசையில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் அமையும்.