Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அட்ஜெஸ்ட்மென்ட் கேட்ட காமெடி நடிகர்: நடிகை பிரகதி புகார்

சென்னை, ஏப்.4: தமிழில் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘வீட்ல விசேஷங்க’ என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரகதி (49). தொடர்ந்து தமிழில் ‘பெரிய மருது’, ‘வாழ்க ஜனநாயகம்’, ‘சும்மா இருங்க மச்சான்’, ‘ஜெயம்’, ‘கெத்து’, ‘பகீரா’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் பிரகதி. தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அவரது வாழ்க்கையின் கசப்பான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் பேசும்போது, ‘‘என்னுடன் நடித்த காமெடி நடிகர் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு தவறான முறையில் சிக்னல் காட்டினார். அப்போது படப்பிடிப்பு தடைப்படும் என்பதால் அங்கு எதுவும் பேசாமல் இருந்தேன். பிறகு கேரவனுக்கு அந்த நடிகரை அழைத்து நான் ஏதாவது உங்களுக்கு சிக்னல் கொடுத்தேனா அல்லது வேறு ஏதாவது தவறான முறையில் நடந்து கொண்டேனா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். பிறகு ஏன் நீங்கள் எனக்கு அப்படி சிக்னல் கொடுத்து கீழ்த்தரமான செயலை செய்தீர்கள் என்று கேட்டேன். இது உங்களுக்கு வெட்கமா இல்லையா? அடுத்த முறை இப்படி பொறுமையாக பேசமாட்டேன் என சொன்னேன்’’ என்றார். அந்த காமெடி நடிகர் யார் என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.