Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கு: இவானா ஷாக்

சென்னை: நடிகை இவானா, தமிழில் பாலாவின் ‘நாச்சியார்’ மூலமாக அறிமுகம் ஆனவர். அடுத்து ‘லவ் டுடே’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார். ‘டிராகன்’ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘கள்வன்’ படத்திலும் நடித்தார். அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இன்ஸ்டாவில் மட்டும் அவரை 2.3 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். தமிழ் சினிமா துறையில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் இவானா பேசி இருக்கிறார். ‘‘எனது தோழிகள் அதை பற்றி சொல்லி கேட்டிருக்கிறேன். சினிமா உலகில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருப்பது நிஜம்தான். ஆனால் என் அம்மா எப்போதும் என்னுடன் இருப்பார். உறவினர் ஒருவரும் எனக்கு பாதுகாப்பாக இருப்பார். அவர்கள் உடன் தான் ஷூட்டிங் செல்வேன். அதனால் நான் இந்த பிரச்னையை நான் சந்தித்தது இல்லை’’ என இவானா கூறியுள்ளார்.