Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்றாங்க: நடிகை காஜல் பசுபதி கண்ணீர்

சென்னை: சமீபத்தில் காஜல் பசுபதி, சாண்டியை விவாகரத்து செய்ததற்கு பின் ஏற்பட்ட காதல் குறித்தும், தனது வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறியது: அதிக பொசஸ்சிவ் காரணமாக நான் நிறைய பேரை இழந்தேன், சாண்டியை கூட அதனால் தான் பிரிந்தேன். எனவே நான் காதலிப்பவர் மீது பொசஸ்ஸீவாக இருக்க கூடாது என்று ஒருவரை காதலித்து அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்தேன். நானும் அப்படி தான் இருப்பேன் என்றேன்.

ஆனால் அவன் எனது பிறந்தநாள் அன்று மற்றவர்களை காதலித்தது போல் என்னை ஏன் காதலிக்கவில்லை என்று விடிய விடிய அடித்தான். மறுநாள் காலையில் நான் அவனை அடித்தேன் என்று எல்லோரிடமும் பொய் கூறினான். அக்கறையாக இருந்தாலும் தவறு, இல்லை என்றாலும் தவறு என்கிறார்கள். மேலும், அட்ஜெஸ்ட்மென்ட்டிற்கு கூப்பிடுபவர்கள், அந்த பெண் சிங்கிளாக இருக்கிறாளா, ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா, திருமணம் ஆனவரா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள்.

அவர்கள் எப்போதும் அட்ஜெஸ்ட்மென்ட் பற்றித்தான் பேசுவார்கள். ஒரு நாள் எனக்கு ஒரு ஃபோன் வந்தது. ‘நீ அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு’ என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள். அதை செய்ய வேற ஆள் இருக்கிறார்கள், அவர்களை வெச்சுக்கோங்க என்று உடனே நான் சொல்லிவிட்டேன். இது போல் என்னிடம் கேட்டு வரும் போது க்ளீன் ப்ராஜெக்ட் ஆக இருந்தால் சொல்லுங்கள், பேமெண்ட் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம், மற்ற விஷயங்களுக்கு நோ என்று தெளிவாக கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கேட்டு நாமாக சென்றால் இயக்குனரிடம் நேரடியாக பேசப்போவது கிடையாது. அவரது மேனேஜர் ஒருவர் இருப்பார். அவர்தான் இதை முதலில் ஆரம்பித்து, நீங்க நேரில் வாங்க பார்க்கலாம் என்று கூறுவார். அப்படி அழைத்தாலே அவர் கண்டிப்பாக அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய தான் சொல்வார். நேரில் பார்த்தால் தான் புராஜெக்ட் தருவேன் என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். இவ்வாறு காஜல் பசுபதி கண்ணீர் மல்க கூறினார்.