Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

5 பேருடன் அட்ஜெஸ்ட்மென்ட் நடிகை மிர்ச்சி மாதவி பகீர் புகார்

ஐதராபாத்: தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ச்சி மாதவி. பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘மிர்ச்சி’ படத்தில் நடித்திருந்த மாதவி, சினிமாவில் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை குறித்து பகீர் தகவல் கூறியுள்ளார். அவர் கூறியது: திரையுலகை சேர்ந்த ஒருவர் போன் செய்து பிரகாஷ் ராஜுக்கு மனைவியாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும், ஆனால் 5 பேருடன் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார். அதற்கு அர்த்தம் புரியவில்லை என்றதும், உங்களை பற்றி எங்களுக்கு தெரியும் என்றார். நான் அப்படிப்பட்டவள் இல்லை. உங்கள் வாய்ப்பு தேவையில்லை என்று கூறிவிட்டேன். இது நல்ல வாய்ப்பு என அவர் சொல்ல, நான் போனை கட் செய்துவிட்டேன். காஸ்டிங் கவுச் எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.

இதேபோல் நடந்த இன்னொரு சம்பவமும் என்னால் மறக்க முடியாது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு புதிய இயக்குனர் போன் செய்து வீட்டில் சந்திக்கலாமா என்றார். அப்போது எனக்கு பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கும் என்று தெரியாது. அவரை வீட்டிற்கு அழைத்தேன். அவர் என்னை நடந்து காட்டச் சொன்னார். பின் புடவை கட்டி வரச்சொல்லி, இடுப்பை காட்டச் சொன்னார். கோபத்தில் செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்து அனுப்பினேன் என்று நடிகை மிர்ச்சி மாதவி தெரிவித்துள்ளார்.