சினிமா துறையில் ஆர்ட் டைரக்டராக விரும்பும் அகத்தியன் (ஜீவா), பாண்டிச்சேரியில் தனது முதல் படத்தின் ஷூட்டிங்கிற்காக கடன் வாங்கி ஒரு பங்களாவை வடிவமைக்கிறார். அப்போது பழங்கால பியானோ ஒன்றைக் கண்டுபிடிக்கும் அவர், அதை வாசிக்கும்போது சில அமானுஷ்ய சம்பவங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜீவா, தன் சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் செல்கிறார். அப்போது...
சினிமா துறையில் ஆர்ட் டைரக்டராக விரும்பும் அகத்தியன் (ஜீவா), பாண்டிச்சேரியில் தனது முதல் படத்தின் ஷூட்டிங்கிற்காக கடன் வாங்கி ஒரு பங்களாவை வடிவமைக்கிறார். அப்போது பழங்கால பியானோ ஒன்றைக் கண்டுபிடிக்கும் அவர், அதை வாசிக்கும்போது சில அமானுஷ்ய சம்பவங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜீவா, தன் சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் செல்கிறார். அப்போது ராசி கன்னா, ஒரு பங்களாவை ஸ்கேரி ஹவுஸாக மாற்றி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆலோசனை சொல்கிறார்.
மீண்டும் பாண்டிச்சேரிக்கு வரும் அவர்கள், அந்த பங்களாவில் கிடைத்த பழைய பிலிம் ரோலை புரொஜெக்டரில் ஓட்டுகின்றனர். திரையில் சித்தார்த்தன் (அர்ஜூன்) என்ற சித்த மருத்துவர், 1940ல் நடந்த கதையைச் சொல்கிறார். அப்போது என்ன நடந்தது? அதற்கும், நிகழ்காலத்து அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு என்பது மீதி கதை.
ஆர்ட் டைரக்டர் வேடத்துக்கு சரியாகப் பொருந்திய ஜீவா, சில அமானுஷ்ய சக்திகளுக்கு நிகராக ஆடும் ஆட்டம் பலே. முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். சித்த மருத்துவராக அர்ஜூன் இயல்பாக நடித்திருக்கிறார். அவருக்கும், அவருடைய காதலிக்குமான இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் ஒன்ஸ்ேமார் ரகம். ஹீரோயின்கள் ராசி கன்னா, மாடில்டா, வில்லன் எட்வர்ட் சோனென்ப்ளிக், ஷாரா, ரெடின் கிங்ஸ்லி, ராதாரவி, நிழல்கள் ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், ரோகிணி, சார்லி ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
பீரியட் கால ஃபேண்டஸி படத்துக்குரிய கலர்ஃபுல்லான ஒளிப்பதிவை தீபக் குமார் பதி கேமரா வாரி வழங்கியுள்ளது. சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் கதைக்கு நன்கு ஈடுகொடுத்துள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலம் சேர்த்துள்ளன. ஆர்ட் டைரக்டர் பி.சண்முகம், காஸ்ட்யூம் டிசைனர்கள் பல்லவி சிங், டினா ரொசாரியோ ஆகியோரின் பணி பாராட்டுக்குரியது. சித்த மருத்துவத்தின் மகத்துவத்தையும், தமிழர்களின் மேன்மையையும் இயக்குனர் பா.விஜய் சொல்லி இருக்கிறார். 1940களுக்கும், நிகழ்காலத்துக்கும் பாலத்தை அமைத்திருக்கும் அவர், லாஜிக் மீறல்களைக் கவனித்து அதைக் களைந்திருக்கலாம்.