Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஏஐ பற்றி அனுராக் எச்சரிக்கை

அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள ‘சிரஞ்சீவி ஹனுமான் The Eternal’ என்ற படம், திரைத்துறையில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை நிறுவனம் ஒன்று, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரித்துள்ள ‘சிரஞ்சீவி ஹனுமான் The Eternal’ என்ற திரைப்படம், பாலிவுட் ஏரியாவில் கடுமையான கண்டனங்களை சந்தித்து வருகிறது. பாலிவுட் இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும், விமர்சகருமான அனுராக் காஷ்யப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த AI திரைப்படம், இனி வரும் காலத்தில் பேராபத்துகளை உருவாக்கும். இதன்மூலம் உண்மையான திறமைசாலிகளை இழந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதுபோன்ற ஏஐ திரைப்படங்கள் அந்த கலைஞர்களை புறக்கணித்து, அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்ற வழிவகுக்கும். தற்போது ஏஐ டெக்னாலஜி மூலம் திரையுலகம் ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருக்கிறது’ என்றார்.