இந்திய இசையுலகில் வரலாற்று சிறப்பு கொண்ட ஒரு தருணமாக, ‘Countries Apart, One Beating Heart’, இந்த வாரம் ஏபி இண்டர்நேஷனல் சேனலில் வெளியாகிறது. கிராஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI) மூலம் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் தேசத்தின் ஒற்றுமை, கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையாகும்.
உலகின் 7 அதிசயங்களை காட்சிப்படுத்தி, 7 வெவ்வேறு மொழிகளில் பாடல் உருவாக்கப்பட்டு, AI மூலம் பல்வேறு பாடகர்களின் குரல்கள், பாடல் வரிகள், இசை அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை காமன்மேன் சதீஷ் மேற்கொண்டுள்ளார். அவர் கூறுகையில், ‘தொழில்நுட்பமும், படைப்பாற்றலும் இணைந்து, எதை சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு முயற்சி இது. நாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், இதயத்துடிப்பு ஒன்றே என்பதை காட்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். AI அதை ஒரு புதிய வகையில் சாத்தியமாக்கியது’ என்றார்.