Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

6 குழந்தைகளுக்கு அம்மாவாக ஆசைப்படும் ஐஸ்வர்யா

ஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை நடிகையாக நடித்தவர், ஐஸ்வர்யா ராஜேஷ். பிறகு ‘அட்ட கத்தி’, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘திருடன் போலீஸ்’ உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். ‘காக்கா முட்டை’ படத்தில் 2 மகன்களுக்கு தாயாக நடித்து கவனத்தை ஈர்த்தார். பிறகு ‘மனிதன்’, ‘தர்மதுரை’, ‘வட சென்னை’, ‘க/பெ ரணசிங்கம்’ உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். திடீரென்று ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ‘கனா’, ‘பூமிகா’, ‘டிரைவர் ஜமுனா’, ‘ஃபர்ஹானா’ போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தியில் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் வெங்கடேஷுடன் நடித்து ஹிட்டான ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படத்தில் 4 குழந்தைகளுக்கு தாயாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கதைக்கு பொருத்தமாக இருந்ததால் 4 குழந்தைகளுக்கு தாயாக நடித்தேன். இப்படத்தின் 2ம் பாகம் உருவானால், அதில் 6 குழந்தைகளுக்கு கூட அம்மாவாக நடிப்பேன். தாய் வேடத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நல்ல நடிகையாக, திறமையானவராக இருக்க வேண்டும் என்றால், இமேஜ் பார்க்காமல் அனைத்து கேரக்டரிலும் நடித்து அசத்த வேண்டும். இதுபோன்ற வேடத்தில் நடிக்க வயது ஒருபோதும் தடையில்லை’ என்றார்.