சினிமா, கார் ரேஸ் என்று அஜித் குமார் பிசியாக செயல்படுகிறார். அவரது மகன் ஆத்விக் ஃபுட்பால் பிளேயராக இருக்கிறார். பிரபல ஃபுட்பால் பிளேயர் ரொனால்டோவின் தீவிர ரசிகரான ஆத்விக், கடந்த அக்டோபர் மாதம் கோவாவில் கால்பந்தாட்ட போட்டியில் ரொனால்டோ பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரை நேரில் சந்திக்க அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மகனின் ஆசையை நிறைவேற்ற நினைத்த அஜித் குமார், தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு ரொனால்டோ தங்கவிருந்த ஸ்டார் ஓட்டலில் சில அறைகளை அட்வான்சாக புக் செய்தார். ஆனால், திடீரென்று ரொனால்டோ கோவா பயணத்தை ரத்து செய்தார்.
இதனால் ஆத்விக் அப்செட் ஆகிவிட்டார். இன்று அஜித் குமார் மனைவி ஷாலினியின் பிறந்தநாள். வெளிநாட்டில் இருக்கும் அஜித் குமார், நேற்று சென்னை திரும்பினார். நள்ளிரவு 12 மணிக்கு அஜித் குமாரின் வீட்டிலேயே ஷாலினியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இதையடுத்து தனது குடும்பத்தினருடன் வெனிஸ் நாட்டுக்கு செல்லும் அஜித் குமார், நாளை நடக்கும் ஒரு நிகழ்ச்சியில், ஏற்கனவே கார் ரேஸில் பங்கேற்று வெற்றிபெற்றதற்கான பரிசை பெறுகிறார். பிறகு துபாய் செல்லும் அவர், அங்குள்ள தனது சொந்த வீட்டில் குடும்பத்தினருடன் தங்குகிறார்.
