சென்னை, நவ.26: அஜித் குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்குகிறது.இது குறித்து அப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறும்போது, ‘‘ஏகே64 படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும். அதற்கு முன்னதாக படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் குறித்து தேர்வு நடந்து வருகிறது.
படப்பிடிப்புக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டதும் படப்பிடிப்பு தொடங்கப்படும்’’ என்று அவர் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்தாலி வெனிஸ் நகரில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் அஜித் குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அஜித் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
