Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அஜித் படம் மீது சட்டப்படி நடவடிக்கை: தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா எச்சரிக்கை

சென்னை: நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா செய்தியாளர்களிடம், அஜித் படம் குறித்து பேசிய விஷயம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ‘‘குட் பேட் அக்லி படத்தில் இடம் பெற்ற ‘பஞ்சு மிட்டாய்’, ‘ஒத்த ரூபாய் தாரேன்’, ‘தூதுவளை இலை அரைச்சு’ என நான் எழுதிய மூன்று பாடல்களும் பிரச்னையில் தான் இருக்கின்றன. புதிய இயக்குனர்களுக்கு புதிதாக சிந்திக்கவும், நல்ல பாடல்கள் எடுக்கவும் முடியவில்லை. இப்போதைய தலைமுறையில் இளையராஜா, தேவா போன்ற கிரியேட்டர்கள் இல்லை. ஆனால் அதற்கான அனுமதி கேட்டு பழைய பாடல்களை பயன்படுத்தலாம். அப்படி யாருமே அனுமதி கேட்பதில்லை. குட் பேட் அக்லியில் நான் எழுதிய எனது இயக்கத்தில் வெளியான படங்களின் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர். எனவே எனது பாடல் தொடர்பாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.