Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அஜித் எனக்கு இன்ஸ்பிரேஷன்: சொல்கிறார் துல்கர் சல்மான்

சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். துல்கர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர். இவர் நடிப்பில் நேற்று வெளியான படம் காந்தா.

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்ய போர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், அஜித் குமார் குறித்து துல்கர் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ‘‘அஜித் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த வயதிலும் அவருக்கு பிடித்த ஒன்றை நோக்கி பயணிக்கிறார். அவருடைய ரேஸிங் கனவை நினைவாக்கி உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.