சென்னை: சாதனையாளராக இருக்கவே விரும்புகிறேன் என நடிகர் அஜித் குமார் கூறினார். கார் ரேஸில் முழு வீச்சில் ஈடுபட்டு வரும் அஜித் குமார் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளதாவது: முதலில் நான் நடிக்க வந்த சமயத்தில் எனது பேச்சில் ஆங்கில மொழியின் சாயல் இருந்தது. தமிழ் சரியாக பேசவில்லை. எனது பலவீனங்களால் பயற்சி எடுத்து, தற்போது நான் இருக்கும் நிலைமை அனைவருக்குமே தெரியும். சினிமா மாதிரியே கார் பந்தயத்திலும் காயம் ஏற்படும். பயிற்சி எடுத்து விரைவாக கற்றுக்கொள்வேன். மற்றவர்கள் என்னைப்பற்றி சொல்லும் விமர்சனங்களை வைத்து, ஒருபோதும் என்னை நானே மதிப்பிட்டு கொள்ள மாட்டேன். வெற்றியாளராக இருப்பதையே நான் விரும்புகிறேன். என்னுடைய கடைசி காலத்தில் நான் எனக்கு பிடித்ததை முயற்சி செய்தேன். ஏதோ செய்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு பேசியுள்ளார் அஜித் குமார். அவரின் இந்த புதிய பேட்டி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.