அனிருத் இதுவரை அஜித்தின் ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விடாமுயற்சி’ ஆகிய 3 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தற்போது 4வது முறையாக அஜித்துடன் இணையவுள்ளார் அனிருத். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி அஜித்குமார், திரிஷா ஆகிய பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தை இயக்குகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்....
அனிருத் இதுவரை அஜித்தின் ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விடாமுயற்சி’ ஆகிய 3 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தற்போது 4வது முறையாக அஜித்துடன் இணையவுள்ளார் அனிருத். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி அஜித்குமார், திரிஷா ஆகிய பலர் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தை இயக்குகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இதனை சமீபத்திய பேட்டியில் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி செய்தார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித், ஆதிக், அனிருத் கூட்டணி முதல்முறையாக இணைவதால் இதனை ‘ஏ3’ கூட்டணி என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். படத்திற்கு எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. முன்னதாக ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளுமா டோலுமா’ பாடல், ‘விவேகம்’ படத்தில் உள்ள ‘சர்வைவா’ பாடல், ‘விடாமுயற்சி’ படத்தின் தீம் மியூசிக் என அனைத்தும் பலரால் பாராட்டப்பட்டது, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இம்முறையும் அதுபோன்ற ஹிட்டாகும் பாடல்களை அனிருத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.