Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அஜித் நடித்த "சிட்டிசன்" திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு!!

அஜித் நடித்த "சிட்டிசன்" திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தில் 9 விதமான தோற்றங்களில் தோன்றி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பர் நடிகர் அஜித். அஜித்தின் கேரியரில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த "சிட்டிசன்" திரைப்படம் கமல்ஹாசனுக்காக தயார் செய்யப்பட்ட கதை என கூறப்படுகிறது. கமல்ஹாசனால் நடிக்க முடியாததால் அஜித் இந்த படத்தில் நடித்துள்ளார்.

"சிட்டிசன்" படத்திற்கு முன்னர் ஃபேமலி சப்ஜெக்ட் படங்களில் நடித்து வந்த அஜித் முதன்முறையாக "தீனா" திரைப்படத்தில் ஏஆர்.முருகதாஸ் உடன் கைகோர்த்தார். அந்த சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க அஜித்திற்கு "தல" என்ற செல்ல பட்டத்தையும் பெற்றுக்கொடுத்தது.

"தீனா" படத்திற்கு பிறகு வெளியான "சிட்டிசன்" திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது. படத்தில் அஜித்தின் 9 விதமான கெட்டப்புகள், வலுவான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. அத்துடன் படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படத்தின் கிளைமாக்ஸில் அஜித் நீதிமன்றத்தில் நடிக்கும் காட்சி பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் சிட்டிசன்" திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து அவரது ரசிகர்கள் இணையதளத்தில் #22YearsofCitizen என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.