Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அஜித்தின் லேட்டஸ்ட் லுக் வைரல்

தற்போது அஜித் குமார் வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். அங்கிருந்து வெளியாகும் அவரது வீடியோக்களும், போட்டோக்களும் வைரலாகின்றன. இந்நிலையில், நேற்று அஜித் குமாரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. திடீரென்று தன் தலைமுடியை வெட்டியுள்ள அவர், மொட்டை அடித்தது போன்ற லுக்கில் இருக்கிறார். ஷார்ட் ஹேர் லுக், அவர் நடிக்க இருக்கும் 64வது படத்துக்காக இருக்கலாம் என்று ரசிகர்கள் கமென்ட் வெளியிட்டுள்ளனர். இப்படம் ஹார்பரில் நடக்கும் சம்பவங்கள் பற்றியதாக இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். கார் ரேஸை முடித்ததும் தனது படத்துக்கான ஷூட்டிங்கை வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்குவதாக அஜித் குமார் சொல்லியிருந்தார்.

அதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், அப்படத்துக்காகவே அஜித் குமார் தனது லுக்கை மாற்றியிருப்பார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அஜித் குமாரின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குமாரின் 64வது படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இதை ஆதிக் ரவிச்சந்திரன் அறிவிக்கவில்லை. சமீபத்தில் அஜித் குமாரை யுவன் சங்கர் ராஜா நேரில் சந்தித்து பேசிய போட்டோ வைரலானது. எனவே, அஜித் குமார் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பது உறுதியாகிவிட்டது போல் தெரிகிறது.