Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

திருப்பதி கோயில் வளாகத்தில் தல என கூச்சல் போட்ட ரசிகர்கள் கடுமையாக எச்சரித்த அஜித்குமார்

சென்னை: கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வந்த அஜித் அவ்வப்போது சென்னைக்கு வருவார். இப்போது கார் பந்தய சீரிஸை முடித்துவிட்டார். கடந்த ஒரு சில நாட்களாகவே இந்தியாவிலேயே இருந்து வருகின்றார். அடுத்த கட்டமாக தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். தன் குடும்பத்துடன் கேரளாவில் இருக்கும் கோயிலுக்கு சென்றிருந்த அஜித் தற்போது திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இந்நிலையில் அஜித் திருப்பதியில் தரிசனம் செய்துகொண்டிருந்தபோது கோயில் வளாகத்தில் ரசிகர்கள் அஜித்தை பார்த்ததும், ‘தல தல’ என கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து அஜித் அவர்களை பார்த்து, இது கோயில். இங்கு இப்படி கூச்சல் போடக்கூடாது என்றார். உடனே ரசிகர்களை எச்சரிக்கும்படி செய்கை செய்தார். அதன் பின் ரசிகர்கள் கூச்சலிடுவதை நிறுத்திவிட்டனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக போய்க்கொண்டு இருக்கின்றது. இதுபோல தான் வெளிநாட்டில் கார் பந்தயத்தின் போது ஒரு சில ரசிகர்கள் அஜித்தை பார்த்ததும் விசில் அடித்தனர். அவர்களை கோபத்துடன் அஜித் எச்சரித்தார். உடனே ரசிகர்கள் அமைதியாகிவிட்டனர்.