Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இவர்களா அஜித் குமார் படத்தின் இயக்குனர்கள்?

அஜித் குமார் நடித்த ‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’, ‘அசல்’ ஆகிய படங்களை இயக்கியவர், சரண். கடந்த 2010ல் வெளியான ‘அசல்’ படத்தின் தோல்வி காரணமாக, பிறகு அவர்கள் இணைந்து பணியாற்றவில்லை. தற்போது 15 ஆண்டுகள் கழித்து அஜித் குமாரை சரண் இயக்குவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் அஜித் குமாரை சந்தித்து ஒரு கதை சொன்னாராம் சரண். அக்கதை அஜித் குமாருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். தனக்கு திருப்புமுனை கொடுத்த இயக்குனர் என்பதால், உடனே அஜித் குமார் சம்மதித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இத்தகவல் உண்மையா, வதந்தியா என்று தெரியவில்லை. ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமாரின் 64வது படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குவார் என்றும், அதற்கு பிறகு அஜித் குமாரின் 65வது படத்தை சரண் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி அஜித் குமார் தரப்பில் பதில் கிடைக்கவில்லை. முன்னதாக அஜித் குமாரின் புதுப்படத்தை இயக்குபவர்களின் பட்டியலில் ‘சிறுத்தை’ சிவா, வெங்கட் பிரபு, தனுஷ், ‘புஷ்பா’ படங்களின் இயக்குனர் பி.சுகுமார், புஷ்கர்-காயத்ரி ஆகியோரது பெயர்கள் உச்சரிக்கப்பட்டு வந்தன. பிறகு அதெல்லாம் வதந்தி லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது.